3 July 2011

கவிதை


தாஜ்மகாலை வடிவமைத்தவர்
உஸ்தாத் இசா
ராஜராஜ சோழனின் இயற்பெயர்
அருள்மொழி வர்மன்
காமராஜரின் அரசியல் குரு
தீரர் சத்தியமூர்த்தி
பைந்தமிழ்த் தேர்ப் பாகன்
என்றழைக்கப்பட்டவர் பாரதியார்
தமிழ் உரைநடையின் தந்தை
வீரமா முனிவர்
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
என்றவர் கணியன் பூங்குன்றனார்
ஆசியாவிலேயே முதன்முதலில்
விற்பனை வரியை அறிமுகப்படுத்தியவர்
ராஜாஜி
டாம் - ஜெர்ரி கார்டூன்
கதாப்பாத்திரங்களைப் படைத்தவர்கள்
வில்லியம் ஹென்னா, ஜோ பார்பெரா
எல்லாம் தெரிந்து என்ன செய்ய?

முகமுடித் திருடன்
எங்கள் பகுதியில் நுழைந்தபோது
அவசர உதவிக்கு அழைக்க
பக்கத்து வீடுகளில் உள்ளவர்களின்
செல்போன் எண் இல்லை.
அதுகூடப் பரவாயில்லை
அவர்களின் பெயர்..?

ஆர்.எஸ்.நாதன்      

1 comment:

  1. நகரத்து வாழ்க்கையின் பிம்பமாய் கவிதை... நன்று... (நான் கவிதையை சொன்னேன்... நகரத்து வாழ்க்கையை அல்ல...)

    ReplyDelete